திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் ஜேம்ஸ் பால் என்ற மத போதகர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. இவரின் மகள் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது.. நேற்று ஜேம்ஸ் பால் தனது மனைவி உடன் தனது மகளை பார்க்க மதுரைக்கு சென்றுள்ளார்..
அவரின் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் அந்த வீட்டுக்குள் புகுந்து பணம் நகைகளை திருட திட்டமிட்டார்.. யாரும் இல்லாத நேரம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர் திருட முயற்சி செய்துள்ளார்.. ஆனால் அந்த திருடனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.. வீட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் முழுமையாக தேடியும் பணமோ அல்லது நகையோ அவருக்கு கிடைக்கவில்லை..
இதனால் அந்த மர்மநபர் விரக்தி அடைந்து வீட்டில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார்..“ திருட வரும் திருடனுக்கு கொஞ்சம் காசு வச்சுட்டு போங்க.. வீட்டுல 1 ரூபாய் கூட இல்லை.. இத்தனை சிசிடிவி கேமரா எதுக்கு? இனி என்னைப் போன்று திருட வரும் திருடனுக்கு கொஞ்சமாவது காசு வைத்து விட்டு செல்லுங்கள். இப்படிக்கு திருடன் என்று“ என எழுதி வைத்துள்ளார்..
இதை தொடர்ந்து மதுரையில் இருந்து வீடு திரும்பிய ஜேம்ஸ் பால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது திருடன் எழுதி வைத்த கடிதத்தை பார்த்துள்ளார்.. இதையடுத்து அவர் நெல்லை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.. இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனிடையே திருடன் எழுதி வைத்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது..
Read More : ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி.. 15 இடங்களில் ED தீவிர சோதனை..



