தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. மேலும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது..
இந்த கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்தே நிர்வாகிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.. அதிக வெயில் இருந்ததால் தவெக நிர்வாகிகளுக்கு தொப்பி வழங்கப்பட்டது.. அதே போல் குடிநீர், பிஸ்க்டர் ஆகியவை வழங்கப்பட்டது..
எனினும் சேலம் பகுதியில் இன்று காலை முதலே அதிக வெப்பம் நிலவியதால் 3 பேர் மயக்கமடைந்தனர்.. இவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.. இந்த நிலையில் தவெக நிர்வாகி கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்..
இந்த நிலையில் சேலம் தவெக கூட்டத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர்.. அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தவெகவினர் அடிக்கப் பாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபனுடம் வந்த நிர்வாகிகள் இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். காருக்கு வழி விடுமாறு கூறி, சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்துள்ளனர்.. விஜய் பிரச்சார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தவெகவினர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது..
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற போது தான் அந்த செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.. மேலும் செய்தியாளர்களின் மைக்கை பிடிங்கியதுடன், அந்த செய்தி நிறுவனத்தின் கார் மீது ஏறி நின்று அதனை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பேட்டி எடுக்க கூடாது என்று கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.. இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் செய்தியாளர்களையும் தவெகவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்..
Read More : வீடுகளில் நாய் வளர்த்தால் ரூ.5,000 அபராதம்..!! வீடு வீடாக சென்று ஆய்வு..!! சென்னை மாநகராட்சி அதிரடி..!!



