சமீபகாலமாக, புற்றுநோய் பலரின் வாழ்வை அமைதியாக அச்சுறுத்தும் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. ஆரம்பகால அறிகுறிகளை கவனிக்கத் தவறுவதாலும், விழிப்புணர்வு இல்லாமையாலும், முற்றிய நிலையில் பலர் உயிரை இழக்கும் சோகங்களும் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் இருந்தாலும், அறிவியல் ஆய்வாளர்கள் ஓர் எளிய இயற்கை மருந்தின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
நாம் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்றுதான் திராட்சை. ஆனால், பெரும்பாலானோர் அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆய்வுகளின்படி, மற்ற பழங்களை காட்டிலும், திராட்சை விதைகளில்தான் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகளும் உட்பொருட்களும் அடங்கியுள்ளன. சமீபத்திய ஆய்வுகள், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விடவும், திராட்சை விதைச் சாறு, முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் திறன் கொண்டது என்று வியத்தகு தகவலை வெளியிட்டுள்ளது.
புற்றுநோய்க்கான சிகிச்சையில் முக்கியமான பிரச்சனை பக்கவிளைவுகள்தான். கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது, புற்றுநோய் செல்கள் மட்டுமன்றி, உடலின் ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால், திராட்சை விதையைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சை, புற்றுநோய் செல்களை மட்டும் நேரடியாக தாக்கி அழிப்பதாகவும், ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்தப் பொடியை நாமே வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் : ஒரு கப் திராட்சை விதை, ஒரு கண்ணாடி ஜாடி மற்றும் ஒரு சுத்தமான பருத்தித் துணி.
தயாரிப்பு முறை :
முதலில் திராட்சைப் பழங்களில் இருந்து விதைகளைப் பிரித்தெடுத்து நன்கு கழுவ வேண்டும். பின்னர், அவற்றை ஒரு துணியில் கட்டி, நீரை முற்றிலும் உறிஞ்சி, இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நன்கு உலர விட வேண்டும். விதைகள் காய்ந்த பிறகு, அதனை மிக்ஸியில் இட்டு, நன்கு பொடி செய்து, காற்றுப் புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் வழிமுறை :
இந்த சக்தி வாய்ந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம். நீங்கள் குடிக்கும் நீர் அல்லது பழச்சாறில் ஒரு டீஸ்பூன் திராட்சை விதைப் பொடியைச் சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து 3 மாதங்களுக்கு குடித்து வந்தால், உடலில் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். இந்தப் பொடியை மருத்துவ ஆலோசனையுடன் சேர்த்துப் பயன்படுத்துவது ஆரோக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : குறைகள் தீர்ந்து மன அமைதி கிடைக்கும்..!! ஆனைமலை மாசாணியம்மன் கோயில் பற்றி தெரியுமா..?