“வாழ்க்கை என்பது இனிமையான உறவுகளால் நிரம்பியதாக இருக்க வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உறவுகள் என்பது அன்பு, பாசம் தரும் பொழுதே சொர்க்கமாகும். ஆனால் அதே உறவுகள் பொறாமை, ஈர்ப்பு, போட்டி, பேராசை ஆகியவையின் மூலம் நம் மனதையும், வாழ்க்கையையும் சிதைக்கும் நிலைக்கும் எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
இந்த நேரத்தில், சாணக்கியர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகள் இன்று நம் சமூகத்தில் மேலும் பொருத்தமாக உள்ளன. உறவுகளுக்குள் மறைந்திருக்கும் நுணுக்கங்களை உணர்த்தும் அவரது நீதி நூல்கள், நமக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இன்று, நாம் உண்மையான உறவுகளையும், நம்மை நசுக்கத் தயங்காத உறவுகளையும் எப்படி அடையாளம் காணலாம்? என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.
மனித வாழ்க்கையில் உறவுகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால், அனைத்து உறவுகளும் நம்மை மேலே கொண்டு செல்லும் என்பதற்கான உறுதி ஏதுமில்லை. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட, வாழ்க்கையின் பல கட்டங்களில் வேறுபட்ட மனப்பான்மையுடன் செயல்பட தொடங்குவார்கள். இது பல முறை நம் நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கும்.
சில உறவுகள் உரையாடும்போது, உங்களிடம் குறை கூறி கொண்டே இருப்பார்கள். உங்கள் நம்பிக்கையை பறிக்கும் வகையில் பேசுவார்கள். உங்களின் நேர்மறை சக்தியை நீக்கி, தாழ்வாகவே நினைக்க வைப்பார்கள். இதுபோன்ற உறவினர்களிடன் நீங்கள் தள்ளியே இருக்க வேண்டும்.
மேலும், உங்கள் சொத்தை, பணத்தை ஏமாற்றுவதோடு மட்டுமின்றி, உங்கள் உயிருக்கே சிலர் அச்சுறுத்தலாகவும் மாறலாம். அவர்களிடம் நட்பு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல், செல்வத்தை அழித்தவர்களை நம்பி கடன் தரக்கூடாது. ஏனெனில், அவர்களுக்கு ஏற்கனவே பணத்தை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. இதனால், நீங்கள் பணம் கொடுத்தால் அது உங்களுக்கு தான் நஷ்டம்.
எப்போதுமே சோகத்துடன் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு அவநம்பிக்கையான சிந்தனை இருக்கும். அவர்களுடன் இருப்பவர்களும் இப்படித்தான் ஆகிவிடுவார்கள். இதனால், சோகத்தை வெல்ல தெரியாமல், வெற்றி உங்களை விட்டு ஓடத் தொடங்கும்.
Read More : உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியாமல் கஷ்டப்படுறீங்களா..? எப்படி தெரிந்து கொள்வது..? இதை முதலில் படிங்க..!!