வீடு கட்டும்போது இந்த தவறை மட்டும் பண்ணிடவே பண்ணிடாதீங்க..!! ஆன்மீகம் சொல்லும் அதிர்ச்சி காரணங்கள்..!!

Home Astro 2025

ஒரு வீட்டில் மேற்கு திசையில் செய்யக்கூடிய சில தவறுகள், சனி பகவானின் கோபத்தை ஈர்த்து, குடும்பத்திற்கு பல சங்கடங்களை கொடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, சனி பகவானின் அருளைப் பெறவும், வாழ்க்கையில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காணவும் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய வாஸ்து விதிகளை இங்கே பார்க்கலாம்.


வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவது, வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும் என்பது ஒரு நம்பிக்கை. இந்த விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டால், நீதி கிரகமான சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி, பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, வீட்டின் மேற்கு திசையில் செய்யக்கூடாத சில வாஸ்து தவறுகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வீட்டின் மேற்கு திசையில் சமையலறை அமைப்பது, வாஸ்து சாஸ்திரப்படி ஒரு பெரிய தவறு. இது உணவு குறைபாடு, உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும். சமையலறை எப்போதும் தென்கிழக்கு மூலையான அக்னி மூலையில் அமைப்பதே சிறந்தது.

மேற்கு திசையில் குளியலறை அல்லது பெரிய பால்கனி அமைப்பதும் வாஸ்து ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்தும். தண்ணீர் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அதன் எதிர்மறை விளைவுகள் குடும்பத்தை நேரடியாகப் பாதிக்கும். மேலும், இந்த திசையில் உடைந்த பொருட்கள் அல்லது குப்பைகள் குவிந்திருந்தால், வீட்டின் நேர்மறை ஆற்றல் குறைந்து, குடும்பத்தில் ஒற்றுமை குலையக்கூடும்.

சனி பகவானின் அருளை பெறவும், வாழ்க்கையில் அமைதியும் முன்னேற்றமும் பெறவும், வீட்டின் மேற்கு திசையை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருப்பது அவசியம். மர சாமான்களை இந்த திசையில் வைத்தால், அவை நேர்மறையான ஆற்றலை தக்கவைக்கும். வாஸ்து விதிகளை முறையாக கடைபிடிப்பது, குடும்பத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.

Read More : புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் 5 இந்திய பால் உணவுகள்!. நன்மைகள் இதோ!.

CHELLA

Next Post

3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! தீபாவளிக்கு முன்பே வரப்போகும் அதிர்ஷ்டம்..!!

Sun Sep 7 , 2025
தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜோதிடத்தின் படி, குரு பகவானின் பெயர்ச்சி ஒரு முக்கியமான நிகழ்வாகும். “குரு பார்த்தால் கோடி நன்மை” என்பது பழமொழி. வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த மாற்றம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவல்லது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். குரு […]
Astro 2025 2

You May Like