கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் இந்த தவறை செய்யாதீர்கள்!. ஆன்மீக சிறப்பு தகவல்கள்!

kovil to house 11zon

மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.. 2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழ தீபம் விளக்கை கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.


சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம். இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும். திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும். கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும், வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது. இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே, மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம், சுபகாரிய நிகழ்வும், தீர்க்காயுளும் உண்டாகும்.

Readmore: மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.83,880 சம்பளத்தில் வேலை..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

KOKILA

Next Post

பொறியியல் மாணவர் சேர்க்கை... 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! அமைச்சர் தகவல்...!

Tue Jun 3 , 2025
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு […]
college 2025 1

You May Like