ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மெட்ராஸின் 62வது பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை வெளியிட்டார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பேசிய அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையை வெற்றியைப் பாராட்டினார்.. பாதுகாப்பு திறன்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ இந்த நடவடிக்கையைப் பற்றி குறிப்பிடுகையில், எல்லைப் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில், பாகிஸ்தானின் உட்புறங்களில் அமைந்துள்ள 9 பயங்கரவாத இலக்குகளை இந்தியா கண்டறிந்து வெற்றிகரமாகத் தாக்கியது.. “எதையும் நாங்கள் தவறவிடவில்லை. எல்லா இடங்களிலும் நாங்கள் தாக்கினோம். யார் எங்கே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்த அளவுக்கு அது துல்லியமாக இருந்தது. இந்த பணி இந்தியாவின் உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு துல்லியத்தின் சாட்சியாக அமைந்துள்ளது.
முழு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் வெறும் 23 நிமிடங்களில் செயல்படுத்தப்பட்டது என்றும், எந்த தவறும் ஏற்படாமல், எதிர்பாராத சேதத்தை ஏற்படுத்தாமல் இருந்ததாகவும் அஜித் தோவல் தெரிவித்தார்.
சர்வதேச ஊடக செய்திகளை விமர்சித்த டோவல், ” பாகிஸ்தான் இந்தியாவுக்கு சேதம் ஏற்படுத்தியதாக வெளிநாட்டு பத்திரிகைகள் கூறுகின்றன.. ஆனால் இந்தியாவில் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு போட்டோவை என்னிடம் காட்டுங்கள்.. சர்வதேச ஊடகங்கள் சில கட்டுக்கதைகளை வெளியிடுகின்றன. மே 10 ஆம் தேதிக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தானில் உள்ள 13 விமானப்படை தளங்களை மட்டுமே படங்கள் காட்டின.. வெளிநாட்டு ஊடகங்கள் படங்களின் அடிப்படையில் வெளியிட்டதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.. ஆனால் நம்மால் பாகிஸ்தான் விமானப்படை தளங்களுக்கு சேதம் ஏற்பட்டது,” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் என்பது பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத இடங்களை குறிவைத்து இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலாகும்.. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. இந்த நடவடிக்கை இந்தியாவின் மேம்பட்ட உளவுத்துறை திறன்களையும் துல்லியத்தையும் வெளிப்படுத்தியது. எந்தவொரு இணை சேதமும் ஏற்படாமல் வெறும் 23 நிமிடங்களுக்குள் அனைத்து தாக்குதல்களையும் முடித்தது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய வலிமையில் நாட்டின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
Read More : ரூ.50 நாணயம் வரப்போகிறதா? மத்திய அரசு சொன்ன முக்கிய அப்டேட்..