இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன..
தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது..
இதனால் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்கள் குவிய தொடங்கினர்.. தங்கள் வாகனங்கள் முழுமையாக பெட்ரோல் நிரப்பியதுடன் சில இடங்களில் கேன்களிலும் பெட்ரோலை சேமித்து வைத்து சென்றதாக கூறப்படுகிறது.. இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை காண முடிந்தது..
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ நாடு முழுவதும் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி.
கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம்; அது மிகவும் ஆபத்தானது. எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் தருகின்றன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7000 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது. டீலர்களுக்கு கடன் கொடுப்பதை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கை தட்டுப்பாடு ஏற்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : “ விஜய் ஆட்சிக்கு வந்த உடன் கரூர் விஷயத்தில் செந்தில் பாலாஜி ஜெயலுக்கு போவார்..” ஆதவ் அர்ஜுனா பேச்சு..!



