இனி ஃபோனில் ‘Hello’ சொல்லாதீங்க..!! AI-ஐ வைத்து நடக்கும் மெகா மோசடி..!! சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

Phone 2025

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஒருவரின் குரலை அவருக்கே தெரியாமல் குளோனிங் செய்யும் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் நிதி மோசடிகள் இப்போது உச்சத்தில் உள்ளன.


சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள 72 வயதான பாட்டி ஒருவர், இது போன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூஜெர்சியில் வசிக்கும் அவரது நாத்தனாரிடம் இருந்து பணம் கேட்டு வாட்ஸ்அப் வழியாக ஒரு புதிய எண்ணில் இருந்து செய்தி வந்திருக்கிறது. புதிய நம்பர் என்பதால் பாட்டிக்குச் சந்தேகம் ஏற்பட, அவர் உடனடியாக அந்த நம்பருக்குப் போன் செய்திருக்கிறார். போனில் பேசியது அவரது நாத்தனாரின் குரலாகவே கேட்கவே, பாட்டி அதை நம்பி ரூ. 1.97 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பிய அடுத்த நொடியே, அந்த நம்பர் பாட்டியை பிளாக் செய்திருக்கிறது.

பின்னர், நியூஜெர்சியில் உள்ள மற்றொரு உறவினருக்குப் போன் செய்து விசாரித்தபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்திருக்கிறார். பணம் கேட்டது அவரது நாத்தனார் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டாலும், குரல் மட்டும் எப்படி சரியாக இருந்தது? என்பதே பாட்டியின் மிகப்பெரிய சந்தேகமாக இருந்தது.

காவல்துறை விளக்கம் :

இது தொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் பாட்டி புகார் கொடுத்திருக்கிறார். போலீஸார் இந்த மோசடி குறித்து விளக்கியபோதுதான் பாட்டிக்கு உண்மை தெரிந்திருக்கிறது. முதலில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து போன் கால் வரும். நீங்கள் எடுத்து “ஹலோ” என்று சொன்னவுடன், அவர்கள் போனை கட் செய்துவிடுவார்கள்.

ஆனால், நீங்கள் பேசிய அந்தச் சிறிய குரல் பகுதி ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கும். அந்தக் குரலைப் பயன்படுத்தி, ஏஐ தொழில்நுட்பத்தின் குளோனிங் முறை மூலம் அச்சு அசல் உங்கள் குரலைப் போலவே ஒரு போலி குரல் உருவாக்கப்படும்.

அந்தக் குரலை வைத்து உங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு, ‘நீங்கள் பேசுவது’ போலக் காட்டி ஏமாற்றிப் பணத்தைப் பறித்துவிடுவார்கள். நிஜமான குரலுக்கும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட குரலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய மோசடிகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருவதாகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகளுக்கு ஆளானவர்களில் 83 சதவிகிதத்தினர் பண இழப்புகளை சந்தித்துள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (48 சதவிகிதத்தினர்), ரூ.50,000-க்கும் அதிகமாக இழந்துள்ளனர். இந்தியர்களில் 69 சதவிகிதத்தினர், மனித குரலுக்கும் ஏஐ உருவாக்கும் குரலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவதில் தடுமாறுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பாக இருப்பது எப்படி..?

காவல்துறையின் அறிவுரைப்படி, இனி பணம் கேட்டு உங்களுக்குத் தெரிந்தவர்கள் புதிய எண்ணில் இருந்து மெசேஜ் செய்தால், ஒருமுறை வீடியோ கால் செய்து ஆளை உறுதி செய்த பின்னரே பணம் அனுப்ப வேண்டும். அடுத்த முறை, உங்களுக்குத் தெரியாத எண்ணில் இருந்து போன் கால் வருகிறது என்றால், முதலில் “ஹலோ” சொல்லாதீர்கள். எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பதை உறுதி செய்துக்கொண்டு பேசுங்கள்.

Read More : இது செம ட்விஸ்டா இருக்கே..!! அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி..!! அதிர்ச்சியில் டாக்டர் ராமதாஸ்..!!

CHELLA

Next Post

டயப்பர்களால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுமா..? தினமும் எத்தனை முறை மாத்தணும்..?

Thu Dec 4 , 2025
Do diapers harm children's kidneys? How many times should they be changed daily?
baby

You May Like