இனி அரிசி சாதம் வைக்க குக்கர் யூஸ் பண்ணாதீங்க..!! பாத்திரத்தில் சமைப்பதால் இத்தனை நன்மைகளா..?

Cooker 2025 e1756260565187

அரிசி, இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள். நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இது, பெரும்பாலான மாநிலங்களில் தினசரி உணவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நாட்டில் வாழ்ந்தாலும், அரிசியை சமைக்கும் முறை வீடு தோறும் மாறுபடும்.


சிலர் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கிறார்கள், மற்றவர்கள் பிரஷர் குக்கரை விரும்புகிறார்கள். இம்மாதிரியான மாறுபாடுகள், சமைக்கப்படும் அரிசியின் சுவையும், அதன் ஊட்டச்சத்துகளும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

அரிசி என்பது கார்போஹைட்ரேடுகள், நார்ச்சத்து மற்றும் சிறிதளவு புரதங்களை உள்ளடக்கிய உணவுப்பொருள். இவை உடலுக்கு தேவையான சக்தியையும், சுறுசுறுப்பையும் வழங்குகிறது. ஆனால், அந்த ஊட்டச்சத்துக்கள் உண்மையில் நம் உடலுக்கு முழுமையாக கிடைக்குமா என்ற கேள்விக்கு, அரிசியை எப்படி சமைக்கிறோம் என்பதுதான் பதில். காலக்கட்ட மாற்றங்களோடு நவீன சமையல் உபகரணங்கள் வந்தாலும், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட பாத்திரத்தில் மெதுவாக வேகவைக்கும் முறை இன்று கூட ஒரு சத்தான தேர்வாக கருதப்படுகிறது.

அதிக தண்ணீரில் அரிசியை சமைத்த பின்பு அதை வடிகட்டும் முறை, உடலுக்கு தேவையில்லாத அதிக ஸ்டார்ச்சை நீக்கி, செரிமானத்திற்கு எளிதாக்குகிறது. இது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. ஏனென்றால், இது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும். மேலும், குறைந்த தீயில் மெதுவாக சமைக்கப்படும் போது, அரிசியில் உள்ள வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் பிழைந்து போகாமல் தக்கவைக்கப்படுகின்றன.

மாறாக, பிரஷர் குக்கரில் சமைக்கும் முறை வேகத்தை அதிகரிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக, அரிசியின் சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் சற்று பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த முறை பெரும்பாலும் அரிசியை ஒட்டும் தன்மையுடன் வைக்கலாம். இது சில சமயங்களில் உணவின் தோற்றத்தையும் சுவையையும் பாதிக்கக்கூடும். ஆனால், புலாவ், பிரியாணி, பருப்பு சாதம் போன்ற உணவுகளை சுவையாக சமைக்க விரும்புவோருக்கு, ஒரு பாத்திரத்தில் மெதுவாக வேகவைக்கும் முறைதான் சிறந்தது.

மொத்தத்தில், அரிசி சமைக்கும் முறை என்பது அதன் சுவையும், சத்தும், எளிதான செரிமானத்தையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. சமைப்பதில் உள்ள சௌகரியத்தை மட்டும் கருதி குக்கரைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, ஆரோக்கியம் என்ற நோக்கிலிருந்து பாரம்பரிய முறையையும் பரிசீலிக்க வேண்டிய அவசியம். உணவு என்பது வெறும் சத்திற்காக மட்டும் அல்ல, நம் உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இருக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.

Read More : “திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம்”..!! இதை உண்மையாக்குவது எப்படி..? நீண்ட நேரம் அடைத்து வைப்பதே இதற்குத்தான்..!!

CHELLA

Next Post

Tn Govt: உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தம்... 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு..!

Wed Aug 27 , 2025
2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் […]
anbarasan 2025

You May Like