தோசை தினம்..!! தினமும் காலை டிபனாக இதை சாப்பிடலாமா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

Dosa 2026

தென்னிந்தியாவின் அடையாளமாகவும், கோடிக்கணக்கான மக்களின் விருப்பமான காலை உணவாகவும் திகழும் தோசைக்கு என ஒரு தனி வரலாறே உண்டு. நாளை ‘உலக தோசை தினம்’ கொண்டாடப்பட உள்ள நிலையில், நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் இந்த உணவு ஆரோக்கியமானதா அல்லது வெறும் சுவைக்கானதா என்ற கேள்வி பலரிடமும் எழுவது இயல்புதான். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள், தோசையை ஒரு முழுமையான ‘சூப்பர் ஃபுட்’ ஆக மாற்றும் ரகசியங்களை நமக்கு உணர்த்துகின்றன.


வெறும் அரிசி மற்றும் உளுந்து மாவை கொண்டு மட்டுமே தோசை சுடுவதை தவிர்த்து, அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சேர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, தோசை மாவில் சிறுதானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்ப்பது அதன் நார்ச்சத்தை அதிகரிப்பதோடு, ரத்தச் சர்க்கரை அளவையும் சீராக வைக்க உதவும். இது செரிமான மண்டலத்திற்குப் புத்துயிர் அளிப்பதோடு, ஒரு சாதாரண உணவை சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவாக மாற்றுகிறது.

தோசைக்கு தொட்டுக்கொள்ளும் சட்னியிலும் நாம் புதுமைகளைப் புகுத்தலாம். வழக்கமான தேங்காய் சட்னியுடன் புரதம் (Protein) நிறைந்த பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சேர்த்து அரைப்பது, உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பையும் ஆற்றலையும் வழங்கும். குறிப்பாக, உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புவோருக்கு, இத்தகைய ஊட்டச்சத்து மிகுந்த தோசை மற்றும் சட்னி வகைகள் ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Read More : ஈரான் கொடுத்த பதிலடி..!! கடலில் மூழ்கும் எண்ணெய் கப்பல்..!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடும் பாதிப்பு..!!

CHELLA

Next Post

வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! இதை செய்தால் உங்களுக்கும் பணம் வரும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Mar 2 , 2026
மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என […]
Agri Money 2026

You May Like