டபுள் ஜாக்பாட்..!! மீண்டும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.4,000..? திமுக அரசு போட்ட மெகா பிளான்..!!

Magalir Urimai Thogai 2025

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக பெண்களின் வாக்குகளை தக்கவைக்க ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 1.31 கோடி பெண் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக 5,000 ரூபாய் ஒரே தவணையாக வரவு வைக்கப்பட்டது.


இந்தத் தொகையில் பிப்ரவரி மாதத்திற்கான 1,000 ரூபாய் மட்டுமின்றி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தலா 1,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிதாக அறிவிக்கப்பட்ட கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2,000 ரூபாயும் இதிலேயே அடக்கம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், பயனாளிகளுக்கு நிதி சென்றடைவதில் எந்தவித தடங்கலும் இருக்கக்கூடாது என்பதற்காகவே, மிக திட்டமிட்டு முன்கூட்டியே இந்தத் தொகையை அரசு விடுவித்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயுடன் நின்றுவிடாமல், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் ‘திராவிட மாடல் 2.0’ திட்டத்தின் கீழ் இந்த உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் நேரடி நிதியுதவி இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களுக்குப் பலத்த சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முதலமைச்சரின் புதிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஒரு சுவாரசியமான நிதிப் பலன் பயனாளிகளுக்கு கிடைக்கவுள்ளது. மாதாந்திரத் தொகை 2,000 ரூபாயாக உயரும் போது, அதனுடன் ஆண்டுதோறும் வழங்கப்படும் கோடைக்காலச் சிறப்பு நிதியான 2,000 ரூபாயும் சேரும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் மட்டும் குடும்பத் தலைவிகள் தங்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 4,000 ரூபாயை பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

Read More : இனி நகைக்கடன் தள்ளுபடி கிடையாது..? கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் அபாயம்..? வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..!!

CHELLA

Next Post

காது மெழுகு ஒரு பொதுவான பிரச்சனை அல்ல; கவனம்.. அது உயிருக்கு ஆபத்தானது!

Fri Feb 20 , 2026
காதில் நீர் வடிதல் பிரச்சனை இருந்தால், பலர் அதை ஒரு சளி அறிகுறி என்று நினைக்கிறார்கள். காதில் நீர் நிரம்பியிருந்தால் அல்லது அடிக்கடி காது கேளாமை ஒரு பிரச்சனையாக இருந்தால், பலர் அதை சளியின் அறிகுறி என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த வகையான காது கேளாமை எலும்பு உண்ணும் நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் நிரந்தர காது கேளாமை அல்லது மூளை தொற்றுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதெல்லாம், பல […]
ear

You May Like