பாபநாசம் பட பாணியில் மனைவி, மாமியாரை கொலை செய்து உடல்களை தோட்டத்தில் புதைத்து அதன் மீது வாழை மரங்களை நட்டு தடயங்களை மறைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓடிசாவின் கஞ்சமா மாவட்டத்தில் உள்ள பகல் கிராமத்தை சேர்ந்தவர் தேபாஷிஷ் பத்ரா. இவரது மனைவி சோனாலி தளால்(23). கணவன் மனைவி இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 12ஆம் தேதி பெண்ணின் தாய் சுமதி தலால் இருவரையும் சமரசம் செய்யும் முயற்சியில் சென்றுள்ளார்.
ஜூலை 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய நிலையில் பத்ரா தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மாமியாரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இரவு நேரம் இருட்டாக மழை பெய்து கொண்டிருந்ததால் பத்ரா இருவரின் உடல்களையும் தன்னுடைய வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சை தோட்டத்திற்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளார்.
பிறகு சந்தேகம் வராமல் இருக்க அந்த இடத்தில் வாழை மரங்களையும் நட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து பத்ரா தனது மனைவி மற்றும் மாமியார் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். பத்ராவிடம் போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார்.
சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் எலுமிச்சை தோட்டத்தில் மண் தளர்ந்து காணப்பட்டது. அந்த இடத்தில் புதிய வாழை மரங்கள் நட்டு வைக்கப்பட்டது போலீசாருக்கு சந்தேகத்தை தீவிரப்படுத்தியது. பத்ராவை விசாரித்த போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தோட்டத்தில் அழகிய நிலையில் காணப்பட்ட உடல்களை போலீசார் மீட்டு பிரயோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பத்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாபநாசம் பட பாணியில் கொலை செய்து உடலை மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.