எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் புற்றுநோய், லுகிமேனியா நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஷாம்பு நிறுவனம் பிராண்டுகளை திருமப்ப் பெறுவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே போலவே யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களில் பென்சின் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் அதனால் அந்த வேதிப்பொருள் உள்ள பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளப் போவதாக கூறியது. அமெரிக்காவில் விற்கப்பட்டு வந்த சாவே, ட்ரஸ்மே, ஆகிய ஷாம்புகளையும் நிறுவனம் திரும்பி பெற்றதாக செய்தி வெளியாகி உள்ளது. இது வரை நிறுவனம் தனது பொருட்களை திரும்பி பெற்றதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் திரும்பப் பெறப்பட்ட பொருட்களால் எந்த பாதிப்பும் இதுவரை நுகர்வோர்களுக்கு ஏற்படவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த பொருட்களை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது.