தரும்புரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தீய, சதிச்செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது.. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள இப்போது திருத்தம் ஏன்? பிகார் மாநிலத்தில் செய்ததைப் போன்று தமிழ்நாட்டிலும் செய்யத் துடிக்கின்றனர்..
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டியலை கையில் எடுத்துள்ளனர். பிகாரில் SIR கொண்டுவரப்பட்ட போது முதலில் எதிர்ப்பு தெரிவித்தது திமுக தான்..
SIR விவகாரத்திலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார். தேர்தல் ஆணையத்தை பார்த்தால் இபிஎஸ்-க்கு பயம், அதனால் அவர் எதிர்க்க துணிவில்லாமல், பாஜகவிற்கு அஞ்சியே SIR-ஐ அவர் எதிர்க்கவில்லை..
பிரதமர் மோடி பிகாரில் தமிழ்நாட்டில் பிகார் மக்களை துன்புறுத்துகின்றனர் என்ற வெறுப்புப் பேச்சை பேசியிருக்கிறார்.. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை பற்றி அனைவருக்கும் தெரியும்.. தமிழ்நாட்டில் வாழும் பிகார் மக்கள் தமிழ்நாடு தங்களுக்கு எப்படி வாய்ப்புகளை உருவாக்கி தந்தது, தங்கள் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்ந்துள்ளது என்று பேசி இருக்கிறார்கள்.. ஆனால் மாண்புமிகு பிரதமர் அவர்கள் வாக்கு அரசியலுக்காக அங்கு நாடகத்தை நடத்தி இருக்கிறார்..
பிரதமர் மோடி அவர்கள் பிகாரில் பேசிய அதே கருத்தை தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும் எவ்வளவு போலி செய்திகளை அவர்கள் உருவாக்கினாலும், 2026-ல் திமுக ஆட்சி அமையும் என்று தெளிவாக சொல்கிறேன்.. திமுக ஆட்சி 2.0 ஆட்சி அமைந்துவிட்டது என்ற செய்தி தான் எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் வரப்போகிறது என்பதை உறுதியாக சொல்கிறேன்..
2026 தேர்தலில் தமிழ்நாட்டை பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து பாதுகாக்கக் கூடிய தேர்தலாக இது அமையப் போகிறது.. அந்த வெற்றிக்கு கழக உடன்பிறப்புகள் உழைக்க வேண்டும்.. உங்களுக்கு பிறக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்று மணமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. CM ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும்.. அண்ணாமலை காட்டம்..



