வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறந்த போதிலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.