தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஓட்டுநர் தேர்வு நடைமுறைகளை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் மூலமாகச் செயல்படும் ஓட்டுநர் தேர்வு மையங்கள் உலகத் தரம் வாய்ந்த தரத்திற்கு உயர்த்தப்படும் வகையில், தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடங்கள் (Automated Driving Test Tracks) தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக, நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “மாநிலங்களின் ஆதரவுடன் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைத்தல்” என்ற திட்டத்தின் அடிப்படையில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்தப் பணிக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக, 2025-26 நிதியாண்டில் 10 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நவீனமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடங்கள் உருவாக்கப்படும். இம்மையங்களில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செய்முறைத் தேர்வுகள் மனிதத் தலையீடு இன்றி, சென்சார்கள் மற்றும் கணினிகள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்படும். இது ஓட்டுநர் தேர்வு நடைமுறைகளில் நிலவும் குழப்பங்களைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.
Read More : தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் போனால் போதும்..!! கொலஸ்ட்ரால் டக்குனு குறையும்.. மாரடைப்பே வராது..!!



