குடித்துவிட்டு தினமும் டார்ச்சர்..!! பக்கத்து வீட்டு இளைஞர் மீது ஆசைப்பட்ட ஆண்ட்டி..!! 2-வது கணவருக்கு தெரிந்த உண்மை..!! சென்னையில் ஷாக்

Sex 2025 3

சென்னை மேடவாக்கம் விஜயநகர் பூங்கா தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (38). இவர், கூலி வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு மீனா (40) என்ற மனைவியும், 22 வயதில் ஒரு மகனும், 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சத்தியசீலன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி மீனாவை துன்புறுத்தி வந்துள்ளார்.


இதன் காரணமாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் மீனாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மீனா, அருணின் ஆசைவார்த்தையில் மயங்கி, அவரோடு கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த கள்ளக்காதல் குறித்து மீனாவின் கணவன் சத்தியசீலனுக்கு தெரியவந்த நிலையில், அவர் இதை கண்டித்துள்ளார். இதற்கு மீனா மறுத்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டை மாற்றி சென்று புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று சத்தியசீலன் கூறியும், மீனா அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சத்தியசீலனுக்கும் மீனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சத்தியசீலன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், மீனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், சத்தியசீலன் கையில் கத்தியுடன் நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், மீனாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி, கணவர் இறந்த பிறகு சத்தியசீலனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் பக்கத்து வீட்டு இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால், இந்த கொலை அரங்கேறியதாக சத்தியசீலன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சத்தியசீலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : வாகனங்கள் வாங்கப் போறீங்களா..? தடாலடியாக குறையப்போகும் விலைகள்..!! முழு லிஸ்ட் இதோ..!!

CHELLA

Next Post

உங்களுக்கு சுகர் இருக்கா..? நீங்க ரத்த தானம் செய்யலாமா..? யாருக்கு ஆபத்து..? மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Mon Sep 15 , 2025
ரத்த தானம் செய்வது ஒரு உன்னதமான செயல். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இது குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் என்ன சொல்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ரத்த தானம் செய்வதற்கு முன் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன ரத்த சோகை (Anemia) : ரத்த தானம் செய்பவருக்கு […]
Blood Donate 2025

You May Like