ஜோதிடத்தின்படி, கேது கிரகம் மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 4:49 மணிக்கு மகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறது. அதைத் தொடர்ந்து, ராகு கிரகம் சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் நுழைகிறது. ராகு மற்றும் கேதுவின் இந்த பெயர்ச்சியானது, 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையவுள்ளது.
மேஷம்
ராகு மற்றும் கேதுவின் இந்த பெயர்ச்சியானது, மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகையில் அமையவுள்ளது. இந்த இரு கிரகங்களின் நட்சத்திர மாற்றமானது, மேஷ ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுவரும். இவர்களுக்கு திடீர் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் தங்கள் செலவுகளை குறைத்துக்கொள்வார்கள். இவர்களின் வருமானமும் கணிசமாக உயரும். பணியில் இருப்பவர்களுக்கு நல்ல பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் பெரிதும் பயனடைவார்கள். இவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வாழ்க்கையில் எதிர்பாராத ஆதாயங்களை ஈட்ட இவர்களுக்கு வாய்ப்புள்ளது. அசையா சொத்துக்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இது ஒரு சிறப்பான காலம் என்று கூறலாம்.
இவர்கள் தாங்கள் திட்டமிட்ட மற்றும் முடிக்காமல் விட்டுவைத்திருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். இவர்களுக்கும் இவர்களின் வாழ்க்கைத்துணைக்கும் இடையிலான பிணைப்பு வலுப்பெறும். இவர்கள் ஒரு நல்ல சுற்றுலா செல்லவும் திட்டமிடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாட்கள் தொடங்கவுள்ளன. ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியானது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடுவார்கள். இவர்களால் பணத்தைச் சேமிக்கவும் இயலும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்டுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் இந்த ராசிக்காரர்களுக்குக் காத்திருக்கின்றன. காதல் உறவுகள் சிறப்பாக அமையும். உடல்நிலையும் மேம்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் பணத்தைச் சேமிக்கவும் தொடங்குவார்கள். இவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்புத் தொகை நிச்சயமாக உயரும். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவர்களின் சொத்துக்களும் பெருகும்.



