தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் பெருமாள், சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த முப்பது நாட்களும் தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவதன் மூலம், நினைத்த காரியங்கள் விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மார்கழியில் தவிர்க்க வேண்டியவை :
புதிய கட்டுமானங்கள் மற்றும் கிரகப்பிரவேசம் : புதிய வீட்டிற்குக் குடியேறுதல் (கிரகப்பிரவேசம்), வீடு கட்டும் பணிகளைத் துவங்குதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இதனால் குடும்பத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும், துவங்கிய பணியில் தடைகள் வரலாம் எனவும் நம்பப்படுகிறது. அதேபோல, புதிதாக சுவாமி சிலைகளை வாங்கி வந்து வைப்பதையும் இந்தக் காலத்தில் தவிர்க்க வேண்டும்.
புதிய தொழில் துவங்குவது : மார்கழி மாதத்தில் தொழில் தொடங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த மாதத்தில் நாம் தொழில் ஆரம்பிக்கும்போது, பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் : தெய்வீக மாதமாக கருதப்படும் மார்கழியில், திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்துவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிட வேண்டும். இந்தச் செயல்கள் தீய விளைவுகளைக் கொடுத்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணம், சூரிய பகவான் இந்த மாதத்தில் பலவீனமாக இருப்பதாகவும், அதனால் இந்த மாதத்தில் செய்யப்படும் காரியங்கள் நீண்ட கால பலனைத் தராது என்றும் ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது.
இவை மட்டுமல்லாமல், புதிய வாகனங்கள், நிலம், தங்கம் அல்லது வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கும் மார்கழி மாதம் உகந்தது அல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த மாதத்தில் தினமும் காலையில் சூரிய பகவானுக்குரிய மந்திரங்களைச் சொல்லி வருவதால், அவரின் முழு அருளையும் பெற முடியும். மற்ற மாதங்களை விட மார்கழியில் செய்யப்படும் வழிபாட்டிற்கு அதிக சக்தி இருப்பதால், இந்த மாதத்தை முழுமையாக இறை வழிபாட்டிற்காகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் பிறகு நல்ல காரியங்களைச் செய்யத் துவங்குவது வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
Read More : டிடிவி தினகரனை கழட்டிவிட்டு மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளி..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!



