நாடு முழுவதும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த சூழலில் தான், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பைக்கில் சில நபர்கள் துரத்திச் சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், இரவு 7 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். நடந்து சென்று கொண்டிருந்த அவரை 5 பைக்குகளில் வந்த கும்பல் வழிமறித்து, லிப்ட் தருவதாக கூறியுள்ளார். ஆனால், பயத்தில் அந்த இளம்பெண் அங்கிருந்து ஓடியுள்ளார்.
பின்னர், அந்த கும்பல் இளம்பெண்ணை வயல்வெளிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், அங்கூர் வர்மா மற்றும் ஹர்ஷித் பாண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read More : “ஆசையாக பேசி ஆசை தீர உல்லாசமாக இருந்த காதலன்”..!! இளம்பெண் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!