பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நிலஅதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள நாடு ஜப்பான். இந்த பகுதியில் பசிபிக் தட்டம், பிலிப்பைன் கடல் தட்டம், யூரேஷிய தட்டம் மற்றும் வட அமெரிக்க தட்டம் உள்ளிட்ட பல புவிச்சரிவு தட்டுகள் சந்திக்கின்றன. இந்த புவிச்சரிவு தட்டுகள் தொடர்ந்து நகர்வதும், ஒன்றோடு ஒன்றும் மோதுவதால், ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது இயற்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக இருந்தாலும், ஜப்பானில் வாழும் மக்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது.
ஜப்பான் இப்படி நிலநடுக்கங்கள் அதிகமாக நடக்கும் இடத்தில் இருப்பதால், அங்குள்ள மக்கள் மற்றும் அரசு தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருகின்றனர். ஜப்பான் நகரத்திற்கு கிழக்குத் தெற்கே 28 கிலோமீட்டர் தொலைவில், 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இரவு 2.43 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப் புள்ளி 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ருப்பினும், அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதே நேரத்தில், இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் 5.7 அளவிலான வேறு ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.