கவுதமாலா நாட்டில் அடுத்தடுத்து பல முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகளில் விரிசல் காணப்பட்டதால் சாலையில் மக்கள் தஞ்சமடைந்தனர்.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் முதல் நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் கவுதமாலா நகரத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில் ஏற்பட்டது. அதன் பின்னர் பல அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகின. அமெரிக்க புவியியல் ஆய்வு’ அறிக்கையின்படி, புதன்கிழமை அதிகாலை 3.11 மணியளவில் இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 3.9 முதல் 5.6 ஆக இருந்தது. தொடர் அதிர்வுகளால் பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
சான் விசென்ட் பக்காயா நகரைச் சுற்றி ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கவுதமாலா நகரத்திலும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு பகுதிளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சேதம், உயிரிழப்புகள் குறித்து முதல்கட்ட தகவல்கள் இதுவரை பதிவாகவில்லை என்றும் அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பலமுறை அதிர்வுகள் பதிவானதால் கவுதமாலா பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர். வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் அவசர மருத்துவக் குழுவினரும், மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் உலகின் பல இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.