‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. திருமண மண்டபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் குணசேகரன் முழுமையாக மன அழுத்தத்துடன் வீட்டுக்கு திரும்புகிறார். யாரிடமும் பேசாமல் மாடிக்கு சென்று கதவை அடைத்து அழுது கொண்டிருக்கும் குணசேகரனைப் பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்கிறது.
ஞானம் கோபத்தில், “நம்ம வீட்டு மரியாதை போச்சு… யாரையும் சும்மா விடக்கூடாது!” என்று கோபத்தில் வெடிக்கிறார். விசாலாட்சியும், “இந்தக் குடும்பம் இப்படி உடைந்து போயிடுச்சே!” என கண்ணீர் வடிக்கிறார். விசாலாட்சி, குணசேகரனை சமாதானப்படுத்த வர, அவர் கண்கலங்கியபடி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
கரிகாலன், “நீ சிங்கம் மாதிரி இருந்தவன்… இப்படி உடைஞ்சு போய் உட்காரக் கூடாது!” என கூற, அதற்கு குணசேகரன் “உன் சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டாங்க, கரிகாலா!” என்று உருக்கமாக கூறுகிறான். அதன்பின், குணசேகரன் தம்பிகளிடம் ஈஸ்வரியை அடித்த விஷயம் மற்றும் அதற்கான வீடியோவை அறிவுக்கரசி வைத்திருப்பதையும், அதனை வைத்து ஜனனி மிரட்டியதையும் வெளிப்படுத்துகிறார். இதனால் கதிரும் ஞானமும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
குணசேகரன் கடும் கோபத்துடன், “இனி என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்!” என உறுதியுடன் கூறுகிறார். இதன்பின், பார்கவி – தர்ஷன் ஆகியோருக்கு அறிவுரை வழங்கி ஜீவானந்தம் வெளியேறுகிறார். அதைத் தொடர்ந்து ஜனனி, “நம்ம போராட்டம் இன்னும் முடியலை. சக்தி, நம்ம வீட்லயே இருந்து எதிர்கொள்ளணும்!” என்கிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரொமோவில் ஜனனி டீம் ஈஸ்வரியை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார்கள். ஈஸ்வரியின் உடம்பு ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைக்க மாட்டேங்குது என்கிறார் டாக்டர். இதனைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பின்னர் அவர்கள் வீட்டுக்கு வர்ற கதிர், ஞானம் இருவரும் யாரையும் உள்ளே விட முடியாது என்கிறார்கள்.
இதனிடையில் தனது ரூமில் இருந்து சக்தி எடுத்த லெட்டர் இல்லாததை பார்த்து குணசேகரன் பேரதிர்ச்சி அடைகிறான். அந்த கடிதத்தை வைத்து பார்க்கும் போது குணசேகரனுக்கு இன்னொரு வில்லன் வரப்போவது உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்த எபிசோட்டில் யார் அந்த வில்லன்.. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Read more: Breaking : 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! கண்டிப்பா ட்ரம்புக்கு இல்ல..!