சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பிரபலமாவதற்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரம் முக்கிய காரணம்.. நடித்த மாரிமுத்து மறைந்த பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ‘எதிர்நீச்சல் 2’ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் எனக் கொண்டுசெல்லப்படும் இந்த கதையில் 4 மருமகள்கள் அட்டகாசமாக நடித்து வருகிறார்கள். தற்போதய கதைகளத்தை பொறுத்தவரை ஈஸ்வரி இன்னும் கோமா நிலையில் இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் தர்ஷனின் கல்யாண ஏற்பாடுகளில் குணசேகரன் கும்பல் முழுமையாக மூழ்கியுள்ளனர். மண்டபம் புக் செய்ய குணசேகரன், கதிர், ஞானம், கரிகாலன் அனைவரும் வெளியேறுகிறார்கள்.
அனைவரும் வீட்டை விட்டு கிளம்பியதும் அறிவுக்கரசி தனது ரூமிற்கு வந்து மறைத்து வைத்திருந்த போனை எடுத்து பார்க்கிறாள். இந்தப்பக்கம் வெளியே கிளம்புவதை போன்று மறைத்திருந்த ஜனனி டீம் மீண்டும் வீட்டுக்கு வருகிறது. இது எதுவும் தெரியாமல் அறிவு ரூமில் உட்கார்ந்து போனை எடுத்து பார்த்து கொண்டிருக்கிறாள். அந்த சமயத்தில் கதவு படார் படாரென தட்டப்பட பதறி போகிறாள். நந்தினி, ரேணுகா, தர்ஷி என அனைவரும் மாறி மாறி அவளை வெளியே வர சொல்கிறாள். இதனையடுத்து அறிவு போனை இடுப்பில் மறைத்து வைத்துவிட்டு கதவை திறக்கிறாள்
அவர்களுடைய குறி அறிவுக்கரசியிடம் இருக்கும் அந்த முக்கியமான ஆதாரம் இருக்கும் போன்! ஆனால் அறிவுக்கரசி சாமர்த்தியமாக அந்த போனை இடுப்பில் மறைத்து விட்டு விடுகிறார். போனை எப்படியும் கையிலெடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் அவளை அடித்து மிரட்டுகிறார்கள்.
அதே நேரத்தில், மண்டபம் புக் செய்ய போன கும்பல், பணத்தை மறந்து விட்டதால் மீண்டும் வீடு திரும்புகின்றனர். இது தெரிந்த அறிவுக்கரசி திடீரென போனை எடுத்து வெளியே எறிகிறாள். தெரியாமல் அந்த போனின் மீது குணசேகரனின் கார் ஏறி உடைத்து விடுகிறது.
பின்னர் தர்ஷினி அந்த போனை எடுத்துக் கொண்டுவந்ததும், அதில் என்ன இருக்கிறது என ஆர்வமடைந்த குணசேகரன் அதை பறித்துக்கொண்டு, தனது நண்பர் மூலம் ரிப்பேர் செய்யும்படி கரிகாலனிடம் ஏற்பாடு செய்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார் அறிவுக்கரசி. இதற்கிடையில், வீட்டு வேலைகளில் எதோ விசித்திரம் நடக்கிறது என்று சந்தேகப்படுகிற குணசேகரன், வீட்டின் பல இடங்களில் CCTV கேமரா பொருத்த திட்டமிடுகிறார்.
அதே நேரத்தில் போன் சரி செய்த நபர் அதில் உள்ள குணசேகரன் – ஈஸ்வரி வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதை வைத்து குணசேகரனை பிளாக்மெயில் செய்து பணம் கேட்பது நல்ல வாய்ப்பு என அவர் யோசிக்கிறார். இனி கதை எப்படி போகும் என யோசித்துக் கொண்டிருக்க இன்றைய எபிசோட் புரொமோவில் ஈஸ்வரி கண்விழிக்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி இருந்தால் தானே பிரச்சனை அவரை முடித்துவிட்டால் என கதிர் அறிவுக்கரசியிடம் கூறுகிறார்.
Read more: LIC நிறுவனத்தில் 841 காலிப் பணியிடங்கள்.. டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!