கோயம்புத்தூரில் நர்சிங் பயின்று வந்த மாணவி நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது காதலனான பொறியியல் மாணவர் ஆர்யனுடன் ஊட்டியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவத்தன்று விடுதி அறையில் மது அருந்தியதோடு, ஊட்டி மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கிடைக்கும் ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களையும் இருவரும் உட்கொண்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, நள்ளிரவில் நீலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால், போதையின் உச்சத்தில் இருந்த ஆர்யன், அது போதையினால் ஏற்படும் சாதாரண மயக்கம் என்று கருதி அலட்சியமாக இருந்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, நீலா அசைவற்று சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அறையிலிருந்த மது பாட்டில்கள், போதை காளான் எச்சங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை கைப்பற்றினர். உடற்கூறாய்வில், மதுவும் போதை காளானும் வினைபுரிந்ததில் இதயத் துடிப்பு சீர்குலைந்து, வலி தெரியாமலேயே அந்தப் பெண் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, காதலியின் மரணத்திற்கு தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் ஆர்யன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்ப்பது புத்திசாலித்தனமா..? வேறு நிறுவனம் மாறுவது புத்திசாலித்தனமா..?



