குஷியில் எடப்பாடி பழனிசாமி..!! அதிமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு..!! அதிர்ச்சியில் திமுக..!!

Edappadi Palanisamy EPS 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கணக்குகள் மற்றும் ஆதரவு நிலப்பாடுகள் குறித்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மேற்கு மண்டலமான கொங்கு பகுதியில் அதிமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜாமணி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு முடிந்த கையோடு, வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜாமணி, விவசாயிகளின் நலனில் எடப்பாடி பழனிசாமி காட்டிய அக்கறையை பாராட்டினார். “கடந்த கால அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் கடைக்கோடி விவசாயிக்கும் சென்றடைந்தன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது. எனவே, தமிழக விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

Read More : தமிழ்நாட்டில் நாளை முதல் லாரிகள் ஓடாது..!! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்..!!

CHELLA

Next Post

“பெண்டாட்டி வந்த நேரம்”..!! எந்த ராசியினருக்கு திருமணத்திற்குப் பின் தொட்டதெல்லாம் பொன்னாகும்..?

Mon Feb 16 , 2026
திருமணம் என்பது வெறும் இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல, அது இரு வேறு விதமான கிரக நிலைகளின் இணைப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சிலருக்குத் திருமணத்திற்கு முன்பாக உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமலும், தொழிலில் தேக்க நிலையும் நீடிக்கலாம். ஆனால், இல்லற வாழ்வில் நுழைந்தவுடன் அவர்களின் ஜாதகக் கட்டத்தில் உள்ள யோகங்கள் செயல்படத் தொடங்கி, வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். அத்தகைய ‘கல்யாண யோகம்’ மற்றும் திருமணத்திற்குப் பின் அமோக வளர்ச்சியைப் பெறப்போகும் அதிர்ஷ்டக்கார […]
marriage

You May Like