திருவண்ணாமலை வைக்கப்பட்டிருந்த ராட்சத அலங்கார வளைவு விழுந்து விபத்துக்குள்ளானதில் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் உயிர் தப்பினார்..
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று வேலூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்..
அந்த வகையில் இன்று அவர் திருவண்ணாமலையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிமுக பேனர் வளைவு விழுந்து விபத்துக்குள்ளானது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் குறுக்கே உயரத்தில் வளைவாக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது..
இந்த விபத்தில் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் உயிர் தப்பினார்.. அவர் பயணித்த பரப்புரை வாகனம் கடந்து சென்ற சில நொடிகளில் அதிமுகவின் ராட்சத பேனர் சரிந்து விழுந்தது.. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. இதையடுத்து அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
Read More : விடைபெற்றார் இல. கணேசன்.. முப்படை வீரர்களின் 42 குண்டுகள் முழங்க.. முழு அரசு மரியாதை உடன் உடல் தகனம்!