தீபாவளிக்கு அதிரடியாக உயர்ந்த முட்டை விலை..!! கறிக்கோழி விலையும் டாப்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

Egg 2025

நாமக்கல் மண்டலம், தென்னிந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகளில், சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 6 கோடியைத் தாண்டி நிற்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விநியோகிக்கப்படுகின்றன.


அதேபோல், தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த முட்டைகள் திகழ்கின்றன. அத்துடன், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலச் சந்தைகளுக்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக இவை அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தான், நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையில் இன்று (அக்டோபர் 19, 2025) மீண்டும் ஏற்றம் காணப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) அறிவிப்பின்படி, முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.25-க்கு விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக, சில்லறை விற்பனை நிலையங்களில் முட்டை விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையின் முக்கிய சந்தைகளில் முட்டை ஒன்றின் சில்லறை விற்பனை விலை ரூ.5.90 என்ற அளவில் விற்கப்படுகிறது.

முட்டை விலை உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது. உயிருடன் உள்ள கறிக்கோழி ஒரு கிலோ ரூ.100 என்ற விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கோழி இறைச்சி விலை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.180 வரை சில இடங்களில் விற்கப்படுகிறது.

Read More : கொட்டித் தீர்த்த பேய் மழை..!! திடீரென வந்த வெள்ளம்..!! ஒரே இரவில் 10,000 உயிர்கள் பலி..!!

CHELLA

Next Post

இந்தப் பக்கத்தில் தூங்கினால், உங்களுக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு வரலாம்!. இந்த தவறை செய்யாதீர்கள்!

Sun Oct 19 , 2025
இதய நோயாளிகளுக்கு தூங்கும் தோரணை மிகவும் முக்கியமானது, ஏனெனில் நீங்கள் தவறான நிலையில் தூங்கினால், அது இரத்த ஓட்டம், சுவாச வீதம், வயிற்று செரிமானத்தை பாதிக்கும் மற்றும் இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும். இப்போதெல்லாம், எல்லோரும் ஒரு பரபரப்பான மற்றும் சோர்வான நாளுக்குப் பிறகு நிம்மதியான இரவு தூக்கத்தை விரும்புகிறார்கள். ஒரு நல்ல இரவு தூக்கம் உடலை நிதானப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது மூளை, இதயம் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க […]
sleeping woman

You May Like