தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்..
அப்போது “ ஒரு ஊரில் ஒரு கோயில் யானை இருந்ததாம்.. அதை யாராலும் ஏமாற்ற முடியாதாம்.. ஆனால் அந்த ஊரில் இருந்த ஒருவர் அந்த யானையை ஏமாற்றிவிட்டாராம்.. தேங்காய்க்கு பதில் சுண்ணாம்பை கொடுத்து ஏமாற்றிவிட்டாராம்.. அருகில் இருந்தவர் நண்பர் அவரிடம் எப்படி யானையை ஏமாற்றினீர்கள் என்று கேட்டாராம்.. அதெல்லாம் தொழில் ரகசியம் என்று யானையை ஏமாற்றியை ஜெகஜால கில்லாடி கூறினாராம்.. பின்னர் நீண்ட நாட்கள் கழித்து அந்த ஜெகஜால கில்லாடியும் அந்த நண்பரும் பேசிய போது, அந்த யானையை ஏமாற்றியது குறித்து பேசிக் கொண்டார்களாம்..
அப்போது அந்த நண்பர், அந்த யானை ஒரு நாள் தெரியாமல் ஏமாந்துவிட்டது என்று கூறினாராம்.. அப்போது எனது திறமை மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்டுவிட்டு, திருப்பி அந்த யானையிடம் சென்று ஒரு வாழைப் பழத்தில் பஞ்சை கொடுத்து ஏமாற்றி உள்ளார்.. ஆனால் அந்த யானை அந்த ஜெகஜால கில்லாடியை தூக்கிப் போட்டு பந்தாடிவிட்டது..
அப்போது அந்த நண்பர், யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்று அந்த ஜெகஜால கில்லாடியிடம் கூறினாராம்.. அந்த யானை தான் நமது வாக்காளர்கள். அந்த ஜெகஜாலம் யார் என்பது உங்கள் மனதில் யார் வந்தாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.. ஆனால் இங்கிருப்பது ஒற்றை யானை அல்ல.. இரட்டை போர் யானைகள்.. உங்களை எல்லாம் யாரும் எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது..” என்று தெரிவித்தார்..



