உலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்..? தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு..! இத்தனை லட்சம் கோடியா?

elon musk

உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிய சாதனைகள் படைப்பது மட்டுமல்ல, வரலாறையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். 2026 பிப்ரவரி நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 850 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி.. இதன் மூலம், 800 பில்லியன் டாலர் என்ற எல்லையை தாண்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை மஸ்க் பெற்றுள்ளார். , தற்போது மஸ்க்கின் சொத்து மதிப்பு லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஸக்கர்பெர்க் ஆகிய மூவரின் மொத்த சொத்துகளையும் சேர்த்ததற்கும் அதிகமாக உள்ளது.


850 பில்லியன் டாலர் சொத்துக்கு காரணமான தொழில் எது?

மஸ்கின் இந்த அபார செல்வ வளர்ச்சிக்குப் பின்னணி அவரது தொழில் நிறுவனங்களே. அதில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது SpaceX மற்றும் xAI ஆகிய இரு நிறுவனங்களின் பெரும் இணைப்பு (merger) ஆகும். இந்த புதிய இணைந்த நிறுவனம் தற்போது 1.25 டிரில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மஸ்க் சுமார் 43 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். அதனால், இந்த ஒரே நிறுவனத்தில் உள்ள அவரது பங்கு மதிப்பே 530 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. இப்போது, மஸ்கின் மொத்த செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கு SpaceX சார்ந்ததாக உள்ளது.

சவால்களும் விசாரணைகளும்

இந்த வெற்றி எளிதில் கிடைத்ததல்ல. பல வெற்றியாளர்களைப் போலவே, எலான் மஸ்கும் சவால்களை எதிர்கொண்டுள்ளார். SpaceX – xAI நிறுவனங்களின் இணைப்பு தற்போது பல நாடுகளில் அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது.

ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், xAI மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அதன் AI chatbot மற்றும் deepfake பட உருவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒழுங்குமுறை அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.

உலகின் முதல் டிரில்லியனர் ஆக மஸ்க் மாறுவாரா?

இந்த ஆண்டிலேயே எலான் மஸ்க் 1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைவதற்கான வாய்ப்பு 75 சதவீதம் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

வர்த்தகர்கள் (traders) இதைவிட அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.. அதாவது, 91% – 2029க்கு முன்பே மஸ்க் டிரில்லியனர் ஆவார். 86% – அடுத்த ஆண்டிலேயே இது நடக்கும், 72% – 2027க்கு முன்பே இந்த சாதனை கிடைக்கும்

மேலும், SpaceX பங்குச் சந்தையில் (IPO) வெளியேறினால், அதன் மதிப்பு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 1.5 டிரில்லியன் டாலர் வரை உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

எலான் மஸ்க் செல்வத்தில் Tesla-வின் பங்கு என்ன?

எலான் மஸ்கின் செல்வத்தில் Tesla நிறுவனத்தின் பங்களிப்பையும் மறக்க முடியாது. சந்தையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், Tesla இன்னும் மஸ்கின் செல்வத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. எலான் மஸ்க் Tesla நிறுவனத்தில் சுமார் 12 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அதன் தற்போதைய மதிப்பு சுமார் 178 பில்லியன் டாலர். இதற்கு மேலாக, 124 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு விருப்பங்கள் (stock options) அவரிடம் உள்ளன.

Tesla பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ள சாதனை சம்பள ஒப்பந்தம் (pay package) காரணமாக, எதிர்காலத்தில் அவரது செல்வம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

டிரில்லியனர் கனவிற்கு நெருங்கும் எலான் மஸ்க்

SpaceX, Tesla மற்றும் xAI — இந்த மூன்று நிறுவனங்களும் முழு வேகத்தில் வளர்ந்து வருவதால், மஸ்க் டிரில்லியன் டாலர் என்ற இலக்கை வேகமாக நெருங்கி வருகிறார். ஒழுங்குமுறை நடவடிக்கைகள், சந்தை மாற்றங்கள் போன்ற அபாயங்கள் இருந்தாலும், தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, உலகின் முதல் டிரில்லியனர் என்ற பட்டம் மஸ்க் கைக்கு எட்டாத தொலைவில் இல்லை என்றே தெரிகிறது..

Read More : ஒரே நேரத்தில் அம்மா, மகளுடன் உடலுறவு..!! கர்ப்பத்தை அறிவித்த பிரபல யூடியூபர்..!! அதிர்ச்சியில் இணைய உலகம்..!!

RUPA

Next Post

தங்கத்தை போல வெள்ளி நகைகளுக்கு வங்கி கடன் கிடைக்காதது ஏன்..? இதுதான் காரணமா..?

Tue Feb 17 , 2026
அவசர பணத்தேவை என்றதும் சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை முதலில் நாடுவது தங்கக் கடன் முறையைத்தான். ஆனால், விலைமதிப்பற்ற மற்றுமொரு உலோகமான வெள்ளியை அடமானம் வைத்து கடன் பெற நினைத்தால், பெரும்பாலான வங்கிகள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. தங்கத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வங்கிகள், வெள்ளி நகைகளைப் பெற தயங்குவது ஏன் என்பதற்குப் பின்னால் வலுவான சில பொருளாதார மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. இதற்கு முதன்மையான […]
silver

You May Like