டிரம்புக்கு எதிராக புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!. அமெரிக்க அரசியலில் பரபரப்பு!.

elon musk trump 11zon

அதிபர் டிரம்பின் வரி கொள்கை சட்டத்தை விமர்சித்து வந்த எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.


அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, அமெரிக்கா கட்சி என்ற பெயரில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: இன்று அமெரிக்கக் கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்ப கொடுக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

”மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது” என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை!. 1000 ரன்களுக்கு மேல் குவித்து சரித்திரம் படைத்த இந்திய அணி!

KOKILA

Next Post

2026 சட்டமன்ற தேர்தலில் DMK கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும்...! அடித்து கூறும் செல்வப்பெருந்தகை...!

Sun Jul 6 , 2025
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம், கிராம கமிட்டியினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி.எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டணி குறித்தும், எந்த தொகுதிகளைக் கேட்க […]
selva 2025

You May Like