பஞ்சாயத்து ஓவர்..? டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவை நீக்கிய எலான் மஸ்க்..!!

trump elon musk 1

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.


அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே உருவாகியிருந்த அரசியல் மற்றும் தொழில்துறை நெருக்கம் தற்போது பெரும் விரிசலை சந்தித்துள்ளது. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரின் எப்ஸ்டீனுடன், டிரம்பை இணைத்து குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக எலான் மஸ்க் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛மிகப் பெரிய குண்டை வீச வேண்டிய நேரம் இது. டொனால்ட் டிரம்ப் பெயர் எப்ஸ்டீன் பைல்ஸில் இருக்கிறது. இப்போது வரை எப்ஸ்டீன் பைல்ஸ் வெளியில் தெரியாததற்கு காரணம் இதுதான். இந்த போஸ்ட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உண்மை வெளியே வரும” என்று கூறினார். இதன்மூலம் டிரம்பை நேரடியாக எதிர்க்க தொடங்கினார் எலான் மஸ்க்.

இதனையடுத்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன. ஒரு தரப்பினர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்தனர். எலான் மஸ்க் கூறிய எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது நீதிமன்ற ஆவணங்களாகும். ஜெஃப்ரின் எப்ஸ்டீன் என்பவர் பெரும் நிறுவனங்களுக்கு வங்கிகளிலிருந்து நிதியை பெற்று தருபவர். பெரும் பணக்காரராக இவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரிய தலைகளுடன் தொடர்பு இருந்தது. ‘லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்’ எனும் தீவில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் 2008ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2019ல் மீண்டும் கைது செய்யப்பட்டார் எப்ஸ்டீன். அதன்பிறகு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுவரை இவரது வழக்கு ஆவணங்கள் பொது வெளியில் பகிரப்படவில்லை. இந்த ஆவணங்களில் டிரம்ப்பின் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் தற்பொது குற்றம்சாட்டியுள்ளார். இதனால்தான் ஆவணங்கள் பொதுவில் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த செயலால் அதிருப்தி தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எக்ஸ்தளப் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். டிரம்பிடம் சமாதான முயற்சிக்காகவே அந்த பதிவை மஸ்க் நீக்கியிருக்கலாம் எனும் தகவல்கள் சமூக வட்டாரங்களில் பரவி வருகின்றன.

Read more: டிகிரி போதும்.. வருவாய் துறையில் டெபியூட்டி தாசில்தார் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..

Next Post

ஜோதிடப்படி.. கணவர் வேலைக்கு வெளியே சென்றவுடன்.. மனைவி இதைச் செய்யக்கூடாது..!!

Sat Jun 7 , 2025
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் நீண்ட ஆயுளுடனும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார். அதுமட்டுமின்றி, தன் கணவருக்காக விரதம் இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இருப்பினும், தங்கள் நல்வாழ்வைப் பற்றி அதிகம் நினைப்பவர்கள் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். வாஸ்துப்படி ஒரு மனைவி தன் கணவர் வேலைக்குச் சென்றவுடன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். […]
husband wife

You May Like