ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 8) காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் தெற்கு காஷ்மீரில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஜம்முவின் ஆர்எஸ் புரா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் (ஐபி) ஒரு பாகிஸ்தான் ஊடுருவல்காரர் கைது செய்யப்பட்டார். ஊடுருவல்காரர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதாவில் வசிக்கும் சிராஜ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் ஆக்ட்ரோய் புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் ஊடுருவிய நபரைக் கவனித்தனர். பின்னர் அவரை சுற்றி வளைத்து எல்லை வேலி அருகே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சில பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டன. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Readmore: 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியனான இந்தியா!. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?.



