இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ராபின் ஸ்மித் காலமானார்..!!

Robin Smith

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராபின் ஸ்மித் 62 வயதில் காலமானார். இந்த தகவலை இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான ஹாம்ப்ஷயர் உறுதிப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த ராபின் ஸ்மித், 1988 முதல் 1996 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். இந்த காலகட்டத்தில் அவர் 62 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 4,236 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 சதங்கள் இடம்பெறுகின்றன. அவரது டெஸ்ட் சராசரி 43.67 ஆகும். மேலும், 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,419 ரன்கள் எடுத்துள்ளார்.


1980 – 2003 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் ஒரு நாள், முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி மொத்தம் 47, 737 ரன்கள், 101 சதங்கள், 225 அரை சதங்கள் அடித்துள்ளார். சமீப காலமாக அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும், அது பிரேதப் பரிசோதனைக்குப் பின் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராபின் ஸ்மித்தின் மறைவுக்கு ஹாம்ப்ஷயர் கிரிக்கெட், இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் பல முன்னாள் வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட் ஷாட்-ந் மாஸ்டர் என புகழ்பெற்ற இவர் இங்கிலாந்தின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: பார்வை குறைபாடு முதல் கண் வறட்சி வரை.. கொய்யா இலை தேநீர் குடித்தால் கண்களுக்கு இத்தனை நன்மைகளா..?

English Summary

England cricket legend Robin Smith passes away..!!

Next Post

“நான் அந்த மாதிரி பொண்ணு இல்லைங்க”..!! பொண்டாட்டி மீது வந்த சந்தேகம்..!! பீர் பாட்டிலால் நண்பனின் மண்டையை உடைத்த கணவன்..!!

Wed Dec 3 , 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பிரிசிலாவின் தாய் மாமன் மகன் பிரேம் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, பிரேம் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். பிரேம் பங்களா வாங்க வேண்டும் என்று கூறி […]
Crime 2025 1

You May Like