தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சதுரங்க வேட்டை இப்போதே தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட்டணி படைகளை திரட்டத் தொடங்கியுள்ளார். இதன் முக்கிய நகர்வாக, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தனது கட்சி முழுவீச்சில் களப்பணியாற்றும் என பெஸ்ட் ராமசாமி உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி பலமாக இருக்கும் சூழலில், இத்தகைய சமூக செல்வாக்கு மிக்க அமைப்புகளின் வரவு, எடப்பாடி பழனிசாமியின் கரங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், சிறிய கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் இப்போதே அதிமுக பக்கம் வரிசைகட்டுவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த முதற்கட்ட ஆலோசனைகள் திரைமறைவில் நடந்து வரும் வேளையில், இந்தத் தொடர் ஆதரவுகள் அதிமுக தொண்டர்களிடையே ஒரு புதுவிதமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Read More : “திருமணமான பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க முடியாது”..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!



