சென்னை வானகரகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அதன்படி, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து தீர்மானம்.
எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
வட கிழக்கு பருவமழையின் போது மக்களை காக்க தவறவிட்டதாக திமுக அரசுக்கு கண்டனம்.
2026 தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றபப்ட்டுள்ளது.
முறையான தரவுகளுடன் மதுரை, கோவை மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.. நீதித்துறையின் தனித்தன்மை காக்கபப்ட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



