“காலில் விழ, காலை வாரிவிட மட்டுமே EPS-க்கு தெரியும்.. NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நாசமாகிவிடும்..” CM ஸ்டாலின் பேச்சு.!

stalin eps

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்ற.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. 


அப்போது பேசிய அவர் “ இன்று நாடு எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதை நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.. இஸ்லாமியர்களான நீங்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே.. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் அதற்கு காரணம் திராவிட மாடல் அரசு தான்.. திமுக தான் சிறுபான்மையின மக்களை காக்கக்கூடிய காவல் அரண்..

அதனால் தான் கும்பல் வன்முறை இங்கு தலையெடுக்காமல் இருக்கிறது.. இந்த அமைதி சிலரின் கண்களை உறுத்துகிறது.. தமிழ்நாட்டின் அமைதியை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று அவர்கள் போடும் ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாகி வருகிறது. அதனால் இ.டி, சிபிஐ, ஐடி போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி கூட்டணி அமைத்து மேடை ஏறியிருக்கிறார்கள்..

அதிலும் துரோகங்களின் அர்த்தமாக, அகராதிகளில் இடம்பிடித்திருக்கும் 10 தோல்வி பழனிசாமி, முஸ்லீம்களுக்கு எதிரான தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.. அவருக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டே ரெண்டு தான். ஒன்று காலில் விழுவது.. மற்றொன்று காலை வாரிவிடுவது..

அப்படிப்பட்ட பழனிசாமி அரசு 2019-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தை ஆதரித்தார்.. 2020-ல் அந்த சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராடிய போது தடியடி நடத்தினார்.. ஆனால் சிஏஏ சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என்று சொன்னவன் தான் இந்த ஸ்டாலின்..

வக்ஃப் சட்டத்தையும் வெளிப்படையாக அதிமுக எதிர்க்கவில்லை. இப்படி எல்லாம் துரோகம் செய்துவிட்டு, கூட்டணி தர்மத்திற்காக சட்டங்களை ஆதரித்தோம் என்ற பச்சைப் பொய்யை பேசுகிறார்.. இப்படிப்பட்ட கூட்டணியை விரட்ட வேண்டிய கடமை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தான் உள்ளது..

2026 தேர்தல் என்.டி.ஏ கூட்டணி VS தமிழ்நாடு.. அதை தோற்கடிக்க கூடிய வலிமை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தான் உள்ளது.. நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சூழலிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது.. தமிழ்நாட்டின் நலன்களை அடகு வைத்திருக்கும் அடிமைகளுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சொல்வோம்.. தமிழ்நாடு தலைகுனியாது.. அடிபணியாது..வெல்வோம் ஒன்றாக..” என்று தெரிவித்தார்.

RUPA

Next Post

ஃபாஸ்டேக் பயனர்கள் கவனத்திற்கு..! பிப்ரவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமல்..!

Thu Jan 29 , 2026
இந்தியாவில் ஃபாஸ்டேக் அமைப்பை எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) சரிபார்ப்பு செயல்முறை பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக்குகள் வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், ஆவணங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் தொந்தரவைக் குறைக்கவும், நுகர்வோர் புகார்களைக் குறைக்கவும் […]
fastag

You May Like