அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்றும் கூறியிருந்தார்.. 10 நாட்களுக்குள் இபிஎஸ் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒன்றிணைக்க தாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியிருந்தார்..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி இதுகுறித்து பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார்.. பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் பேசி இருப்பதை வரவேற்கிறேன்.. அதற்கு 10 நாள் அவகாசம் வழங்கி இருக்கிறார்.. ஆனால் செங்கோட்டையன் பட்ட அவமானங்களை பற்றி அவர் சொல்லவில்லை.. பழனிசாமி பற்றி எல்லா விஷயங்களையும் அவர் பேசியிருக்க வேண்டும்.. அவர் எதைப் பற்றியும் பேசவில்லை.. அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறுகிறார்..
10 நாட்களுக்கு பின் என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் தலைமையேற்க போகிறீர்களா? அடுத்தவர்களின் தலைமையை ஒப்புக் கொள்ளப் போகிறீர்களா? எனக்கு சரியான பதிலாக தெரியவில்லை.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்.. யார் உங்களை முதலில் கூப்பிட்டார்கள்..
செங்கோட்டையன் எல்லாம் ஒரு பெரிய ஆளா, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று பழனிசாமி பதில் சொல்லப்போகிறார்.. நீங்கள் ஒற்றுமைக்கு அழைத்திருக்கிறீர்கள்.. ஆனால் பழனிசாமி ஒற்றுமைக்கு தயாராக இல்லை.. 10 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறார்.. செங்கோட்டை (பாஜக டெல்லி தலைமை) சொல்லியே இபிஎஸ் கேட்கவில்லை.. செங்கோட்டையன் சொல்லியா அவர் கேட்கப் போகிறார்.. இதை எல்லாம் பொருட்படுத்தக் கூடிய நல்ல மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை.. அவர் ஒற்றுமையை விரும்பவும் இல்லை..” என்று தெரிவித்தார்..
Read More : “செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்..” முதல் ஆளாக ஆதரவளித்த ஓபிஎஸ்..