“ஸ்டாப் என சொல்லும் வரைக்கும் நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் இபிஎஸ்..” பங்கம் செய்த ஸ்டாலின்..!

EPS MK Stalin 2025

திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. பாஜகவின் கிளை கழகம் தான் அதிமுக.. தவழ்ந்து தவழ்ந்து பதவியை பெற்ற, இபிஎஸ் பின்னர் சசிகலாவின் காலை வாரிவிட்டார்.. பொல்லாத பழனிசாமி ஆட்சிக்கு சாட்சியாக பொள்ளாசி சம்பவம் உள்ளது.. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. பச்சை துண்டு போட்டு பச்சை துரோகம் செய்த பழனிசாமியை விவசாயிகள் மறக்க மாட்டார்கள்.


திமுக அரசை அவதூறுகளால் களங்கப்பட்டுத்த நினைத்தால் அதை மறக்க மாட்டார்கள்.. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நமது அரசு மாதிரி சாதனை செய்த அரசே கிடையாது. நம்ம போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல,, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.. இப்படி சாதனைகளை செய்யும் அரசு இந்தியாவிலேயே இல்லை என வட இந்திய ஊடகங்கள் பாராட்டு தெரிவிக்கின்றன.. பாஜகவின் டப்பா என்ஜின்  முன்பு, தமிழ்நாட்டின் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது..

ஒன்றிய பாஜக அரசின் துரோகங்களை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் சிறப்பு திட்டங்களை அறிவித்தார்களா? இதை தட்டிக் கேட்கும் தைரியமோ துணிச்சலோ பழனிசாமிக்கு இருக்கா? அவரை பொறுத்த வரை, போடு தோப்புக்கரணம் என்று சொன்னால் ஸ்டாப் என சொல்லும் வரைக்கும் நான் ஸ்டாப்பாக பல்டி அடிப்பார்.. எனவே அதிமுக என்பது பாஜக பயணம் செய்ய பயன்படுத்தி கொள்ளும் கிளைக்கழகம்..

திராவிட மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நமது இலக்கை அடையும் வரை ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.. நமது இலக்கு 200 தொகுதிகள்.. தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்ற இந்த ஜனநாயகப் போரில் வெல்ல உழைக்க வேண்டும்.. மீண்டும் வெல்வோம்.. மீண்டும் மீண்டும் வெல்வோம்.. வெல்வோம் ஒன்றாக..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

தட்டி தூக்கிய ஸ்டாலின்..! திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர்..! ஷாக்கில் இபிஎஸ்..!

Sat Feb 14 , 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக […]
stalin nilofer kabil

You May Like