எப்ஸ்டீன் பைல்ஸ்.. முரட்டுத்தனமான உடலுறவில் கொல்லப்பட்ட 2 பெண்கள்.. பண்ணையில் புகைக்கப்பட்டார்களா? நடுங்க வைக்கும் தகவல்கள்..!

Jeffrey Epstein New Mexico ranch 1

மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை சமீபத்தில் அமெரிக்க நீதி வெளியிட்டது.. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்ற அழைக்கப்படும் இந்த கோப்புகளில் வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம், எப்ஸ்டீனுக்கு சொந்தமான ஸொர்ரோ ராஞ்ச்-இல் நடந்ததாக கூறப்படும் பழைய குற்றச்செயல்கள் குறித்து சுயாதீன விசாரணையை தொடங்கியுள்ளது.


இந்த விசாரணைக்காக மாநில சட்டமன்றத்தைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, எப்ஸ்டீன் அந்த இடத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்பதையும், 2008-ஆம் ஆண்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும் அவர் ஏன் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் பாலியல் குற்றவாளியாக பதிவு செய்யப்படவில்லை என்பதையும் விசாரிக்கிறது.

பல ஆண்டுகளாக எழுந்து வந்த அரசியல் அழுத்தங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து, இந்த சுயாதீன விசாரணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக, சாண்டா ஃபே நகரத்தைச் சேர்ந்த டெமோக்ராட் கட்சி மாநில பிரதிநிதியான ஆண்ட்ரியா ரொமேரோ நியமிக்கப்பட்டுள்ளார். குழு ஜூலை மாதத்திற்குள் இடைக்கால அறிக்கையை வெளியிடும் என்றும், இறுதி அறிக்கை டிசம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் ‘சொரோ ராஞ்ச்’-இல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும், இதுவரை அதனை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லை என்று ஆண்ட்ரியா ரோமேரோ தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நடந்த மத்திய அரசின் விசாரணைகள், அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை பதிவு செய்யும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணங்களை உருவாக்க தவறியதாகவும் அவர் கூறினார்.

“எப்ஸ்டீனின் செயல்பாடுகள் குறித்து பல ஆண்டுகளாக வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால், மத்திய அரசின் விசாரணைகள் எந்த அதிகாரப்பூர்வ பதிவையும் உருவாக்கவில்லை. இந்த உண்மை ஆணையம், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்,” என ரோமேரோ தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வெளியானது. அந்த மின்னஞ்சலில், ‘சொரோ ராஞ்ச்’ அருகிலுள்ள மலைப்பகுதிகளில் இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த பெண்கள் முரட்டுத்தனமான பாலியல் வன்கொடுமையின் போது கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில், “கீழே உள்ள தகவல்கள், எதிர்காலத்தில் எப்ஸ்டீனுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டால் பயன்படும் என, அவரது வீட்டிலிருந்து எடுத்தவை. மன்னிக்கவும், எந்தக் கேள்விகளுக்கும் இடமில்லை. ஜெஃப்ரி எப்ஸ்டீனைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள் இன்னும் எழுதப்படவில்லை. ‘சொரோ ராஞ்ச்’-க்கு வெளியே உள்ள மலைப்பகுதிகளில், இரண்டு வெளிநாட்டு பெண்கள் எப்ஸ்டீன் கொடுத்த உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் இருவரும் கடுமையான பாலியல் செயலின் போது கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழு, உண்மையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தும் நோக்கில் செயல்படும் என்று ஆண்ட்ரியா ரோமேரோ உறுதியளித்துள்ளார். விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாகவும், உண்மை மற்றும் பொறுப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த குழுவின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RUPA

Next Post

“தோல்வி அடைய வாழ்த்துகள்..” திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில் இபிஎஸ் பதிவு..!

Thu Feb 19 , 2026
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் திமுகவில் இணைந்த இந்த முடிவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே வலுவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு இது வலு சேர்த்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், […]
dmk dmdk eps

You May Like