ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்களுக்கு உரிமை உண்டு எனவும் கூறியது.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் படைகளுக்கு அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக நேற்று அந்த நாட்டின் கூட்டுப்படை தளபதி அப்துல் ரகிம் மவுசவி அறிவித்து இருந்தார். இதனால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் ஈரானின் ஏவுகணைகள் எட்டும் தூரத்திலேயே உள்ளன. ஈரானின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் அரசு தனது வான் எல்லையை மூடிவிட்டது.
ஆனால் இதையும் மீறி ஈரான் ராணுவம் நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. கத்தார் மட்டுமின்றி சிரியா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஒரு ஏவுகணைத் தாக்குதலும், ஈராக் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வெளியிட்ட ஆடியோவில் கூறியுள்ளதாவது, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமனெி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 12 மணி நேரத்தில் உடனே தப்பிச்செல்ல வேண்டும். ஈரான் மதத் தலைவர் தங்கள் பட்டியலில் இருக்கிறார். கடவுள் அவரை பாதுகாக்கட்டும். இவ்வாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Readmore: பழிக்கு பழி வாங்கிய ஈரான்!. அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்!.