எதிர்நீச்சல் சீரியல் தற்போது கல்யாண மண்டபத்தில் நடக்கும் சம்பவங்களால் பெரும் திருப்பங்களை சந்தித்து வருகிறது. அறிவுக்கரசியை போலீசார் அழைத்து செல்லத் தயாராக இருக்கும் தருணத்தில், ஜனனி திடீரென எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
போலீசார் அறிவுக்கரசியை அழைத்துச் செல்ல முனைந்தபோது, ஜனனி திடீரென “உடனே கிளம்பி போகாதீங்க சார், இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சுட்டு போங்க!” என்கிறாள். இதைக் கேட்ட குணசேகரன் அதிர்ச்சியடைந்து, “என்னது கல்யாணமா? எழவு விழுந்து இருக்கு. பத்து நாளைக்கு எந்த விசேஷமும் நடக்கக் கூடாது!” என கூறுகிறார்.
ஆனால் ஜனனி திடீரென “மாமா, உங்ககிட்ட தனியா பேசணும், வாங்க” என்று அழைத்துச் செல்கிறாள். அந்த அறையில் ஜனனி,குணசேகரனிடம் போனை காட்டி, “ஈஸ்வரி அக்காவோட நிலைமைக்கு நீங்க தான் காரணம் என்கிற ஆதாரம் இதுல இருக்கு!” என்கிறாள். மேலும், “இதோட நகலும் என்கிட்ட இருக்கு, கொற்றவை மேடத்திடமும் இருக்கு! இப்போ கல்யாணம் நடக்கணும் இல்லேன்னா டிஜிபி ஆபீஸுக்கு போயிடும்!” என ஜனனி எச்சரிக்கிறாள்.
இதை கேட்ட குணசேகரன் செய்வதறியாது திணறுகிறான். இதையடுத்து தர்ஷன், பார்கவி மணமேடையில் அமர, கல்யாணம் சிறப்பாக நடந்து முடிகிறது. தாலி கட்டியதும் குணசேகரன் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறுகிறான். அவனைப் பின்தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் வெளியேறுகின்றனர். குணசேகரன் வீடு வந்து மாடிக்குச் சென்று தன்னை பூட்டிக்கொள்கிறான்.
இதற்கிடையில், வீட்டில் ஞானம் கடும் கோபத்தில் “அண்ணனை அவமானப்படுத்திட்டாங்க! இப்போ நானே பழி தீர்க்குறேன்!” எனச் சத்தியம் செய்கிறான். இதனை விசாலாட்சி சமாதானப்படுத்த முயல, ஞானம் “எனக்கு குடும்பம் வேணாம், அண்ணன் கையால சாப்பிட்ட நன்றியை இப்போ இதுல காட்டுறேன்!” என ஆவேசமாக கூறுகிறான். இதையெல்லாம் குணசேகரன் அமைதியாகக் கேட்டு கொண்டிருப்பான்.
மறுபக்கம், கல்யாணம் முடிந்ததும் அன்புக்கரசி தர்ஷன் – பார்கவிக்கு எதிராக “உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டேன்!” என சாபம் விடுகிறாள். அதன்பின் ஜனனி, பார்கவியிடம் “இப்போ தான் தொடங்குது. உன் அப்பாவை கொன்றவர்களுக்கு தக்க பதில் கொடுக்கணும்!” என்கிறாள். இப்போ எல்லோரின் மனசும் கலக்கம்! ஜனனி, பார்கவி அடுத்ததாக என்ன திட்டமிடப்போகிறார்கள்? குணசேகரன் என்ன முடிவு எடுக்கிறார்?
Read more: சுக்ரதித்ய யோகம் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், புகழ் பெருகும்..!