பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் ராமதாஸின் உடல்நிலை போனில் நலம் விசாரித்தார். பின்னர் கடந்த 7-ம் தேதி ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே தனது தந்தை உடல்நிலை குறித்து பேசிய ராமதாஸ் “ மருத்துவர் ஐயா நலமாக இருக்கிறார்.. மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றார்.. இந்த செக்-அப் திட்டமிட்ட செக்-அப் தான்.. அவர் நன்றாக இருக்கிறார் ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனால் சிலர் ஃபோன் செய்து ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என்று வரவழைக்கின்றனர்.. யார் யாரோ வந்து ஐயாவை சந்தித்து செல்கின்றனர்.. இது என்ன எக்ஸிபிஷனா.. ஐயாவின் உயிர் இது..
நான் இருக்கும் போது யாரும் காரிடர் கிட்ட கூட வரமாட்டார்கள்.. ஐயாவின் பாதுகாப்பு கருதி யாரையும் விடமாட்டேன்.. ஐயாவுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் உடன் அவருடன் இருப்பவர்களை தொலைத்துவிடுவேன்.. சும்மா விட மாட்டேன்.. நான் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்து ஐயாவை வைத்து டிராமா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..” என்று ஆவேசமாக பேசினார்..
இந்த நிலையில் ஐயாவிற்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன் என அன்புமனி ராமதாஸ் கூறியதற்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்பது அவரின் பேச்சு மூலம் தெரியவந்துள்ளது.. மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேசமாட்டான்.. ஐயாவை பார்த்துக் கொள்ள துப்பில்லை என்று காட்டமாக விமர்சித்தார்.. மருத்துவமனையில் இருந்த போது தன்னை தலைவர்கள் வந்து என்னை சந்தித்தது ஆறுதல் சொன்னார்கள்.. அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.. அவர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டேன்..” என்று தெரிவித்தார்..