“கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்தும் விஜய் வெளியே வரல.. அவர் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும்..” இபிஎஸ் சாடல்..!

1332588

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டார்..  இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.. படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்..


மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.. அதற்கான செலவை அரசே ஏற்கும். சிறுபான்மை வகுப்பினர் சுய தொழில் தொடங்குவதற்கு, வட்டியில்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ் “ விஜய் பொதுவெளியில் வரவே இல்லை.. கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்தும் விஜய் வெளியே வரவில்லை.. நாட்டில் என்ன நடக்கிறது என்றே விஜய்க்கு தெரியவில்லை.. எந்தெந்த கட்சி எந்த கட்சி உடன் கூட்டணியில் உள்ளது என்றும் தெரியவில்லை.. எந்த கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது என்றும் அவருக்கு தெரியவில்லை.. அவருக்கு ஒன்றுமே தெரியாத போது எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது? அவரிடம் போய் கேளுங்கள்..

அதிமுக கூட்டணி அமைத்த போது, கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் அமித்ஷா தெரிவித்தார்.. இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என்று அமித்ஷா தெளிவுபடுத்தி விட்டார்.. இதை விஜய்க்கு டிவியில் பார்க்க நேரமில்லை.. அவருக்கு மக்களை பார்க்கவும் நேரமில்லை, தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்துகொள்ளவில்லை.

ஒரு கட்சியின் தலைவருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.. விஜய்க்கு எதுவுமே தெரியவில்லை.. நாட்டு நிலவரம் எதுவுமே தெரியவில்லை.. ஒரு முறையாவது அவரை செய்தியாளரை சந்திக்க சொல்லுங்கள்.. நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் தான், வெளியே என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளட்டும்..

ஊழல் சக்தி என்று யாரை சொல்கிறார் விஜய்.. எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்ல முடியாது.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவரின் ரோல் மாடல் என்று சொல்லிவிட்டார்.. அவர் எப்படி அதிமுகவை ஊழல் என்று சொல்ல முடியும்.. அவருடன் இருப்பது யார்.. அதிமுகவில் இருந்து வெளியே போய் தவெகவில் ஒருவர் சேர்ந்துள்ளார்.. எங்களை குறிப்பிட்டு சொன்னால் நாங்கள் பதில் சொல்ல முடியும்..” என்று தெரிவித்தார்..

Read More : Breaking : ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்..! முதியோர் உதவித்தொகை ரூ.2,000..! 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட இபிஎஸ்..!

RUPA

Next Post

Breaking : ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்: 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! இந்திய ராணுவம் அதிரடி..!

Wed Feb 4 , 2026
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. மஜல்தா பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முற்றுகையை இறுக்கியபோது, ​​இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜப்பார் மற்றும் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் […]
jammu encounter

You May Like