சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் பெண் வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் 2023-ஆம் ஆண்டு மரியாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தச் சூழலில்தான், ஒரு திருநங்கை நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை அளித்த புகாரில், கடந்த 15 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றி வருவதாகவும், அதில் கடந்த 5 ஆண்டுகளாக நாஞ்சில் விஜயனும் தானும் காதலித்து வந்ததாகவும் அந்த திருநங்கை கூறியுள்ளார். இருவரும் காதல் உறவில் இருந்தது நாஞ்சில் விஜயனின் குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும், அவருக்குத் திருமணம் ஆகும் வரை குடும்பத்தினர் தன்னிடம் நன்றாகப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், நாஞ்சில் விஜயனுக்குத் திருமணம் ஆனதும், அவரது குடும்பத்தினர் தன்னை ஒதுக்கியதாகவும், திருமணத்திற்குப் பிறகும் நாஞ்சில் விஜயன் தன்னுடன் பழகி வந்ததாகவும் திருநங்கை தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தங்கள் உறவு குறித்து வீட்டில் சண்டை வருவதாகவும், குழந்தை இருப்பதன் காரணமாக இந்த உறவை நிறுத்திக்கொள்வோம் என்றும் நாஞ்சில் விஜயன் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். தற்போது வேண்டாம் என்றால் என்ன அர்த்தம். நான் அளித்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
நான் ஒரு திருநங்கை என்று தெரிந்துதான் அவர் என்னைக் காதலித்தார். ஆனால், இப்போது என்னை ஒரு திருநங்கை என்பதற்காக ஒதுக்குவது மனதளவில் மிகவும் வேதனை அளிக்கிறது என்று கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். இந்தச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : அடிக்கடி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்..? 18% GST..!! இனி ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா..?