ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரி (30 வயது) என்ற இளம்பெண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், என்ஜினீயரான யோதீஸ்வரனுக்கும் (34 வயது) கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு யோதீஸ்வரனும் ஜோதீஸ்வரியும் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தனது மனைவியை பிரிந்து யோதீஸ்வரன், சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கே சென்றுவிட்டார். ஆனால், அவ்வபோது சென்னை வந்து தனது மனைவியை பார்த்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஜோதீஸ்வரியின் சகோதரி முத்துலட்சுமி வசித்து வருகிறார். சுதந்திர தினத்தன்று விடுமுறை என்பதால், அவர் வீட்டுக்கு ஜோதீஸ்வரி சென்றுள்ளார். பின்னர், மாலையில் தனது வீட்டுக்கு புறப்படுவதாக கூறிவிட்டு, மாடிக்குச் சென்றுள்ளார் ஜோதீஸ்வரி.
மொட்டை மாடிக்கு சென்றதும் தனது செருப்பு, கைப்பையை கழற்றி வைத்துவிட்டு 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜோதீஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தற்கொலைக்கு முன்பாக ஜோதீஸ்வரி எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர், கஞ்சா உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார். மேலும், டேட்டிங் செயலி மூலமாக 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதையெல்லாம், கணவரின் லேப்டாப்பை பார்த்து தெரிந்து கொண்ட ஜோதீஸ்வரி மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : இந்த ஒரு உணவு உங்கள் உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறலாம்..!! இளைஞர்களே உஷார்..!!



