ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை கொடுத்தும், நிறம் என்ற காரணத்தை சொல்லி ஒரு பெண்ணை புகுந்த வீட்டார் நடுத்தெருவில் நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணின் வீட்டார் சார்பில் 25 பவுன் தங்கம் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக வழங்கப்பட்டது. ஆனால், மணவாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கோபிலட்சுமியின் கருப்பு நிறத்தைப் புகுந்த வீட்டார் கேலி செய்ய தொடங்கியுள்ளனர்.
“நீ கருப்பாக இருப்பதால் உன்னை எங்களுக்குப் பிடிக்கவில்லை; அந்த நிறத்திற்கு ஈடுகட்ட இன்னும் கூடுதல் பணம் வேண்டும்” என அவரது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் கோபிலட்சுமி வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டார்.
தன்னுடைய வாழ்க்கையை சீரழித்த கணவர் குடும்பத்திடம் நீதி கேட்டு, கோபிலட்சுமி தனது கணவர் வீட்டின் முன்பே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். நிறத்தை வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இத்தகைய பிற்போக்குத்தனமான செயல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சமூக வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச நாப்கின்..? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!



