சட்டப்பேரவையில் இன்று கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர்.
ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. அப்போது எதை நீக்க வேண்டும் என்று கேட்டு அதனை நீக்க பரிசீலிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் சபாநாயகரிடம் தெரிவித்தார்..
அப்போது சபாநாயகர் எதை நீக்க வேண்டும் என்று சொல்லுங்ள் அதை நீக்குகிறோம்.. அமளியில் ஈடுபடாதீர்கள் என்று தெரிவித்தார்.. தூத்துக்குடி சம்பவம் நடந்தது தானே அதை சொல்வதால் என்ன பிரச்சனை என்று சபாநாயகர் கூறினார்.. ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுகவுக்கு இன்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்..
தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் அதிமுகவினர் அனைவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..
இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் “ அதிமுகவுக்கு கூட்டணி சரியாக அமையவில்லை.. எனவே கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுகிறார்.. எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அதிமுகவினர் திட்டமிட்டு பேரவைக்கு வந்துள்ளனர்.. அதிமுகவினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் வந்திருக்குமா என தெரியவில்லை.. மெகா கூட்டணி , மகா கூட்டணி என்றெல்லாம் சொல்கின்றனர்.. ஆனால் அப்படி தவெக உடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் எந்த பயனும் இல்லை.. அதிமுக எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் பயன் தராது, மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்..