கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. உயிரிழந்த 41 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பதே இதில் வேதனையான விஷயம்..
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் பெரிதாக விஜய்யை விமர்சிக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல போனால் குழந்தை போனால் போகட்டும், விஜய்யை பார்த்தால் போதும் என்று சில பெண்கள் பேசும் வீடியோக்கள் வைரலானது.
இந்த நிலையில் சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களும் குழந்தை போனால் கூட பரவாயில்லை என்று பேசும் வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஏன் இரண்டரை வயது குழந்தையை வெயிலில் கூட்டி வந்தீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.. அதற்கு அந்த பெண் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.. அதற்கு அந்த செய்தியாளர், இரண்டரை வயதுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு அந்த பெண்ணுடன் இருந்த மற்றொரு பெண், எங்களுக்கு தளபதி விஜய்யை பார்க்க வேண்டும்.. அவ்வளவு தான். அது தான் எங்களுக்கு முக்கியம்.. எங்களுக்கு பாதுகாப்பு எல்லாம் முக்கியம் இல்லை.. எங்களுக்கு மனசாட்சி எல்லாம் இல்லை.. தளபதியை பார்த்த பின் தான் எங்களுக்கு மனசாட்சியே என்று கூறுகிறார்.. எனினும் இந்த கூட்டத்திற்கு 2 வயது குழந்தையை கூட்டி வந்தது தப்பு, அது விதி மீறல் என்று ஆக்ரோஷமாக கூறுகிறார்..
உயிர் போனாலும் பரவாயில்லை, குழந்தை போனாலும் பரவாயில்லை விஜய் தான் முக்கியம் என்று கூறும் அந்த பெண்களுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.. குழந்தை மீது செய்தியாளருக்கு இருக்கும் அக்கறை கூட இந்த பெண்களுக்கு இல்லை என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
Read More : தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவல நிலை.. ஏத்துக்கவே முடியாது.. திமுக அரசை சாடிய விஜய்..!



